அறைகூவல்:
எழுக தமிழ் மங்கையரே! நல்லிளைஞீர்!
உங்கள் இளமை தரும் கனவொருபால் தற்காலிகமாக இருக்கட்டும்; முன்னே
தொழுக நம் தமிழன்னையினை;
நம் தமிழை ஏற்ற துலங்குக நும் ஒருங்கிணைந்த ஆற்றல்!
தமிழால் இணைக!
தமிழுக்காய் இணைக!
தமிழுக்குள் ஒன்றாய் இணைக!
தமிழன்னையை, நம் உயிரை அரியணையேற்றி ஆளவைப்பதற்காய் முனைக!
துணிவுறவே ஊரூராய்த் தெருத்தெருவாய்ச் சென்றே உங்கள் தமிழ்நறுஞ் சொல்லாலே உழுக தமிழர் உளளங்களை, அவர்கள் இதயங்களை.
உங்கள் நாம் தமிழர் கட்சி இலக்குகள், தமிழ்மக்களாட்சிச் சமத்துவ நிலைக் கொள்கைகள், தமிழர்களின் ஒளிமயமான செழிப்பான வாழ்வுக்கான திட்டங்களை அவர்கள் இதயங்களில் ஊன்றுக உங்கள் செந்தமிழால்! தமிழ் அன்பு அணுகுமுறைப் பொறுமை பண்புமுறையால்!
தமிழ்மக்களின் சிந்தனையை, தீர்க்கதரிசனத்தை, வளமான எதிர்காலத்திற்கான முன்தோற்றத்தை அவர்கள் இருதயங்களில் உங்கள் நல் வார்த்தைகளால் பதியவையுங்கள்!
தமிழுணர்வு ஊற்று அவர்கள் இருதயங்களிலிருந்து பொங்கிவழியச்செய்யுங்கள்!
எண்ணஎரு ஊழ்க்க!
செழுமையுறுந் தமிழ்க்குலத்தை விளைவிக்க!
அவ்வழியே நம் செந்தமிழ்த்தாய் அரசோச்ச ஏற்றவழி செய்மே!
வாழ்க தமிழ்!
வாழ்க தமிழர்கள்!
அரசாளுக நாம் தமிழர்!
சதிகளை தமிழ் போதிக்கும் மதி நுட்பத்தால் வெல்க!
ஊழல், அதிகார பக்கச்சார்பு, அடக்குமுறை, அரசநிர்வாகத்தில் மக்களுக்கு சமநீதியாய்ச் செய்யவேண்டிய கடமைகளில் மறைமுக அழுத்தங்கள் காரணமாக மாறுபாடுகள், முறைகேடுகள் போன்ற அனைத்தும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் செய்யவேண்டிய “நோய்கள் தீர்க்கும் சிகிச்சைகளில் சில”. தானத்தில் சிறந்த நிதானத்தை, விவேகத்தை கடைப்பிடித்து வெற்றி பெறுக!
]]>